குவைத் நாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த இலங்கைப் பணிப்பெண் ஒருவா் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவாினால் கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி கொலைசெய்யப்பட்ட நிலையில் அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான இலங்கைப் பெண்ணொருவரே இவ்வாறு கொல்லப்பட்டிருந்தாா். இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அவர் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், குறித்த பெண்ணின் சடலம் நேற்றையதினம் கட்டார் ஏர்வேஸ் விமானம் மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதி காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளாா்