எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் தினம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அத்தியாவசிய சேவைகளுக்கு இது தடையாக இருக்காது எனவும் அவா் தொிவித்துள்ளாா்.