கொரோனா தொற்று அதிகரித்துள்ளமையினைத் தொடா்ந்து மலேசியா முழுமையாக முடக்கப்பட்டுள்ளது
எதிர்வரும் ஜூலை மாதம் 07 ஆம் திகதி வரை நாடு முடக்கப்பட்டுள்ளதாக தொிவித்துள்ள அந்நாட்டுப் பிரதமர் மொஹிதீன் யாசீன் அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் பொருளாதார துறைசார் வர்த்தகத்தை தொடர அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அவர் தொிவித்துள்ளாா்.
மலேசியாவில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று மூன்றாம் அலையானது, தேசிய நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.