வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலைப் பகுதியில், பௌத்த வழிப்பாட்டு நிகழ்வொன்று நேற்று திங்கட்கிழமை 910.05.21) நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பல பௌத்த துறவிகள, படையினர் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் இந்த வழிபாட்டு நிகழ்வு நிகழ்வு நடைபெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் கூறுகின்றது.
மட்டுப்படுத்தப்பட்ட வழிபாடாக இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதி அனுமதிக்கப்படவில்லை. அதனால் மெலதிக தகவல்கள் வெளியாகவில்லை.
முல்லைத் தீவின் குருந்தூர் மலையில் புராதன பௌத்த விகாரை காணப்பட்டதாக தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் புதிய விகாரை ஒன்றினை அமைத்து வழிபாடுகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக உள்ளூர் மக்களிடையே சந்தேகம் நிலவி வருகிறது.
இவ்வாறான சூழலில் நேற்றைய தினம் திங்கட்கிழமை – (10.05.21) பிரதேச மக்களுக்கோ ஊடகங்களுக்கோ அனுமதி வழங்கப்படாது, வழிபாட்டு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் நேற்றைய வழிபாட்டு நிகழ்வுகள் புதிய விகாரை அமைப்பதற்கான ஆரம்பமாகமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இலங்கையில் கொரோனா நோய் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் மத வழிப்பாட்டிடங்களில் 50 பேருக்கு மேல் கூடி வழிபாடு மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வழிபாடு குறித்து முல்லைத்தீவு மாவட்ட சுகாதார பிரிவினரpடம் எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என சுகாதார தரப்புகள் மூலம் அறிய முடிகிறது. ஆக ஒரு நாடு ஒரு சட்டம் என்பது கடைப்பிடிக்கப்படுகிறதா? ஏன்ற கேள்விகளையும் பிரதேச மக்கள் எழுப்பி உள்ளனர்.