136
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஏ பிரிவில் உள்ள 42 சந்தேகநபர்களுக்கு எதிரான சாட்சியங்களை உறுதிப்படுத்துமாறு காவற்துறைமா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா காவற்துறைமா அதிபர் சந்தன விக்கிரமரத்னவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றில்,
சந்தேகநபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதா என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
5 சந்தேகநபர்கள் தொடர்பிலான விசாரணைகள் முழுமை பெறாமல் உள்ளதாக அவர் குறித்த கடிதத்தின் ஊடாக குறிப்பிட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரண நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
Spread the love