Home இந்தியா ஈழ அகதிகளும், கொரோனாவும், தமிழக முகாம்களும் – முதல்வரின் கவனத்திற்கு!

ஈழ அகதிகளும், கொரோனாவும், தமிழக முகாம்களும் – முதல்வரின் கவனத்திற்கு!

by admin

தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் கொரோனாவிற்கு கொட்டகைகளில் தங்க வைக்கப்படுகின்றனரா ?.

ந.லோகதயாளன்.

தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் தங்கியுள்ள அகதிகள் முகாமில் இதுவரை 7 முகாம்களில கொரோனா தொற்று பரவியுள்ளபோதும் முகாம்களிலேயே கொட்டில்கள் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தல் வழங்கப்படுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் நூற்றுக் கணக்காண அகதிகள் முகாமில் ஈழ அகதிகள் 75 ஆயிரம் பேரளவில் தங்கியுள்ளனர். இவ்வாறு ஈழ அகதிகள் தங்கியுள்ள பல முகாம்களில் இருந்து தப்பித்து மீண்டும் தாயகம் திரும்புவது அதிகரிக்கும் நிலையில் தமுழ்நாட்டில் இதுவரை 7 முகாம்களில் உள்ள பலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்படுகின்றமையும் ஓர் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

ஈழ அகதிகள் முகாமிலும் கொரோனா பரவியுள்ளது.
———————-_-

இதுவரை மண்டபம் முகாம், திருச்சி கொட்டப்பட்டி முகாம், உட்பட 7 முகாம்களில் அதிகமாகவும் மேலும் இரு முகாமில் ஒரு சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலைக்கு சென்றாலும் அவர்களது குடும்பம் அந்த நெருங்கிய முகாம்களிலேயே தனியான கொட்டகைகளில் தங்க வைக்கப்படுவதாகவும்
இதேநேரம் தற்போது முகாம்களில் தனியாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் கொட்டகைகளில் 21 பேர் கொரோனா தொற்றுடன் வாழ்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இவ்வாறு ஒரே வளாகத்திற்கு உள்ளேயே அருகில் கொட்டகை அமைத்து கொரோனா தொற்றாளர்களை தங்க வைத்திருப்பதே தமக்கு பெரிய உளவியல் தாக்கமாகவும் அச்சமாகவும் உள்ளது. ஈழத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அனைத்து உடமைகளையும் இழந்து உயிர் தப்பினால் போதும் என்பதற்காக ஆபத்தான பயணம் மூலம் தமிழகம் சென்ற போதும் தற்போது கொடிய நோயில் அகப்படுவோமோ என்ற அச்சமே மீண்டும் தாயகம் திரும்பினால் என்ன என்ற மனக் குழப்பத்திற்குள் தள்ளுகின்றது.

முகாம்களில் வாழும் ஈழத் தமிழரகளின் நிலமை.

இந்தியாவில் நாம் வாழும் முகாம்களானாலும் வெளியில் தங்கியுள்ளவர்களானாலும் இன்றும் இலங்கையில் எமது உறவுகள் வாழும் சுதந்திரத்தை விடவும் நின்மதியாக வாழ்வதாகவே எண்ணுகின்றோம். இருப்பினும் இங்கும் பல பிரச்சணைகள், நெருக்கடிகள் இருக்கின்றன. இங்கே மின்சாரம், வைத்தியம் இலவசம் அதேநேரம் ஒருவருக்கு நாள் ஒன்றிற்கு 150 ரூபா ( இந்திய நாணயம் ) வாழ்வாதாரத்திற்கு போதுமானது. ஆனால் இந்த தொகையில் இலங்கையில் வாழ முடியாது. இதேநேரம் எமது பிள்ளைகள் இந்தியாவில் கற்றதனால் இந்திய சான்றிதழுடன் இலங்கையில் தொழில் செய்ய முடியாது. இவற்றினாலேயே தாயகம் திரும்ப மனம் இன்றி இருந்தோம். இருப்பினும் தற்போது கொரோனா மீண்டும் தாயகம் நோக்கி இழுக்கின்றது என்கின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள மண்பம் முகாம் மட்டுமல்ல பல முகாம்கள் எமது பகுதி மாட்டுக்கொட்டில் போன்றே இன்றும் உள்ளது. அதாவது 1990ஆம ஆண்டு இருந்த கட்டிடங்கள் அப்படியே இருப்பினும் எமது உயிரை பாதுகாப்பதற்காக வந்து பின்னர் தற்போது 20, 30 ஆண்டுகால வாழ்வியல முறமையாகிவிட்டது என்கின்றனர்.

திருகோணமலையை சேர்ந்த மற்றொருவரின் ஆதங்கம்.
—–++++++——

திருகோணமலையை சொந்த இடமாக கொண்ட 31 வயது பெண்மனி தகவல் தருகையில் நான் மன்னாரில் திருமணம் செய்து 12 ஆண்டுகளிற்கு முன்பு தமிழகம் வந்து முகாமில் வாழும் நிலையில் இரு பிள்ளைகளும் முகாமிலேயே பிறந்து இன்று கல்வி கற்கின்றனர். இவ்வாறுவாழும் எமக்கு குடும்பத் தலைவருக்கு மாதம் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாவும் அடுத்தவருக்கு 750 ரூபாவும சிறுவர்களிற்கு 400 ரூபா என்ற அடிப்படையில் தற்போது மாதாந்தம் 2 ஆயிரத்து 550 ரூபா கிடைக்கும் ஆனால் மாதம் 12 ஆயிரம் ரூபாவில் இருந்து 15 ஆயிரம் ரூபா குடும்பச் செலவிற்கு வேண்டும். ஏனெனில் ஒரு கிலோ மீன் 250 ரூபா விற்பனையாகும்போது 4 பேர் கொண்ட எமக்கு 2 ஆயிரத்து 550 ரூபா ஒரு கிழமைக்கே போதுமானது.

இருந்தபோதும் கணவர் வெலியில் கூலி வேலை கிடைத்தால் செல்வதன் காரணமாகவே திருப்தியாக உணவு கிடைக்கின்றது. இந்த அவலம் வேண்டாம் என நாடு திரும்ப பதிவு செய்துள்ளேன். ஆனால் கொரோனா தடையாகவுள்ளது என்றார்.
எம்முடன் உரையாடிய மூவரும் தமது பெயர் அடையாளம் வெளிவருவதனை விரும்பவில்லை.

இந்திய முகாம் அதிகாரிகளின் பதில்.
——+-++++—————–

இதேநேரம் தமிழக முகாம்களில் இருப்போரை நாடு திரும்ப விரும்பினால் அனுப்ப தயாராகவே உள்ளோம். அதற்காக ஒபர் நிறுவனத்தின் ஊடாக யு.என்.எச்.சி ஆர் ஊடாக விமானத்தில் சகல செலவும் இலவசமாகவே அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

தற்போதைய கொரோனாவினால் மட்டுமே விமான சேவை இடம்பெறவில்லை. திருட்டுத் தனமாக கடல்வழியாக படகுகளில் செல்பவர்களில் அதிகமானோர் இந்தியாவில் இருந்து வெளிதாடுகளிற்கு தப்பிச் செல்ல முயன்றவர்கள், திருட்டுத் தனமாக இந்திய கடவுச் சீட்டு பெற முயன்றோர் அல்லது ஏதாவது குற்றம் புரிந்தவர்கள் எனில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்நும்போது வழக்குச் செலவு, சட்டத்தரணி செலவு , இதற்கான போக்கு வரத்து என்பன இலவசமாக வழங்கப்பட மாட்டாது.

இதனால் இந்த வழக்குகளிற்கு அதிக செலவு ஏற்படும் நிலமையிலேயே படகுகள் மூலம் இலங்கைக்கு தப்பிச் செல்கின்றனர் என இந்திய முகாம் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More