தமிழகத்தில் திரைப்பட மற்றும் சின்னத்திரை தொடர்பான சகல படப்பிடிப்புகளும் மே 31 வரை ரத்து செய்யப்படுவதாக தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா இரண்டாவதுஅலை பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முடக்கநிலை அமுலில் உள்ள போதும் அதில் திரைப்படப் படப்பிடிப்புக்கான அனுமதி குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.
மேலும், அனுமதியின்றின் தொடர்ந்து படப்பிடிப்புகள் சட்டவிரோதமாக நடைபெறுவதாக நடிகை சாந்தினி ருவிட்டரில் முறைப்பாடு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவது குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, படப்பிடிப்புக்கு அனுமதி கோரிய இரண்டு திரைப்படங்களுக்குத் தாங்கள் அனுமதி மறுத்துள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை முதல் 16 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் எனலும் தொிவித்துள்ளாா்.
திரைத்துறை தொழிலாளர்களின் பாதுகாப்பை மனதில் கொள்ளும் அளவுக்கு தற்போதைய சூழல் நிலவுவதனால் மே 31 வரை திரைப்படம், சின்னத்திரை என எந்தப் படப்பிடிப்பும் நடைபெறாது எனத் தொிவித்துள்ள அவா் பிரபலமான சிலரோடு சேர்த்து இன்னும் சில திரைத்துறை தொழிலாளர்களும் கொவிட்-19 தொற்றால் மரணமடைந்துள்ளனர் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.