தமிழ் சிவில் சமூகஅமையம்
Tamil Civil Society Forum
17 மே 2021
12 மே 2021 அன்று முள்ளிவாய்க்காலில் கடந்தபலவருடங்களாக நிறுவப்பட்டிருந்த நினைவுச் சுடர் தாங்கியை இலங்கை அரசாங்கம் சேதமாக்கியுள்ளது. எந்த அரசவக்கிரம் இனப்படுகொலையை எம்மீதுகட்டவிழ்த்து விட்டதோ அதேஅரசவக்கிரம் எமதுஉறவுகளை நினைவு கூறுவதைதடை செய்கின்றது. இந்ததேசத்தில் கண்ணீர் விடுவதும் விளக்கு கொளுத்துவதும் குற்றமாக்கப்பட்டு பலவருடங்கள் ஆகின்றன. இதுவும் இனப்படுகொலையின் தொடர்ச்சியே.
போருக்குப் பிந்திய எமதுதேசத்தில் கண்ணீரும் நினைவுமே எமதுமிகப் பெரிய அரசியல் ஆயுதங்கள். எமது சுயநிர்ணய உணர்வையும் சுதந்திரதாகத்தையும் அணையவிடாமல் பாதுகாக்கநினைவுமுக்கியம். எமதுவடுக்களைதுயரைநாம் சந்ததிகளோடு கடத்துவதுஎமது கூட்டுணர்வுக்கும் இருப்பிற்கும் முக்கியமானது. நினைவுத் தூபிகளைஅழிப்பதென்பதுநினைவு கூரலை அழிப்பதாகாது என்பதை எதிர்வரும் மே 18 அன்று ஒன்றிணைந்து வெளிப்படுத்துவோம் இந்த நினைவு எம்மைப் பொறுத்தவரையில் பழிவாங்கலோடு சம்பந்தப்பட்டது அல்ல. அதுநீதியோடும் பொறுப்புக் கூறலுக்கும் எமதுஎதிர்காலத்தோடும் சமபந்தப்பட்டது.
மே 18 அன்றுபின்வரும் நான்குகாரியங்களை வீட்டில் இருந்துசெய்யுங்கள் எனநாம் கோருகின்றோம்:
- உங்கள் பிள்ளைகள்,சகோதரசகோதரிகள், இளம் பராயத்தவரோடு சிலமணிநேரம் செலவளித்துஏன் இந்த இனப்படுகொலை எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டது,விடப்படுகின்றதுஎன்பதுதொடர்பில் உரையாடுங்கள. அரசியல் பேசுங்கள்,பேசப் பழக்குங்கள்
- அனைத்து மின்சார ஒளிப்புகளையும் அணைத்து, இருளேந்தி, ஒரு விளக்கை உங்கள் வீட்டுஎல்லையில் ஃ தூணில் இரவு 6 மணிக்குஎரியவிடுங்கள்.அதனை ஏன் ஏற்றினீர்கள் எனஉங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.
- ஒருவேளையாவது சாதாரணகஞ்சி செய்துசாப்பிடுங்கள். ஏன் இன்று கஞ்சிகுடிக்கிறோம் என்பதனை பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்துங்கள்.
- உங்கள் நம்பிக்கைஎதுவாயினும் உங்கள் பிரார்த்தனையில் உயிர் நீத்த அனைவரினதும் அமைதிக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
(ஒப்பம்)
அருட் தந்தை. வி. யோகேஸ்வரன்,
பொ. ந. சிங்கம்
இணைப் பேச்சாளர்கள்
தமிழ் சிவில் சமூகஅமையம்