109
பொத்துவில், செல்வவெளி வயல் பகுதியில் உடலில் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக இன்று (16.05.21) காலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளதாக பொத்துவில் காவற்துறையினர் தெரிவித்தனர்.
பொத்துவில் 15 களப்புகட்டு விச்சு நகரைச் சோந்த 3 பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீதவான் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொத்துவில் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love