தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக கட்டப்பட்டுள்ள தூபியில் விளக்கேற்ற சென்ற சிவாலிங்கத்தை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தி அட்டகாசம் புரிந்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவு தூபியில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்ற முயன்ற போது அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர்.
அதனையும் மீறி தூபி இருந்த வளாகத்தினுள் சென்று சிவாலிங்கம் விளக்கேற்ற முயன்ற போது , சப்பாத்து கால்களுடன் இராணுவத்தினர் அதனுள் சென்று சுடரேற்ற விடாது சிட்டிகளை பறிக்க முயன்றும் , அதனை தட்டி விடவும் முயன்றனர்.
அதனால் அவ்விடத்தில் இராணுவத்தினருக்கும்
சிவாஜிலிங்கத்திற்கும் இடையில் நீண்ட வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் , சிவாஜிலிங்கத்தின் அடையாள அட்டையின் இறுதி இல்லக்கத்தின் பிரகாரம் இன்றைய தினம் வெளியில் செல்ல முடியாது எனவும் , அதனால் கொரோனா நோய் சுகாதார கட்டுப்பாடுகளை மீறிய குற்ற சாட்டில் கைது செய்வோம் என மிரட்டி அனுப்பி உள்ளனர்.