கொங்கோ நாட்டின் கோமா நகர் அருகே உள்ள நியிராகாங்கோ எரிமலை திடீரென வெடித்துச் சிதறியதில் . 15 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
.எரிமலை வெடித்தபோது ஏற்பட்ட குழம்பு, பக்கத்து கிராமங்களுக்கு பரவியுள்ளது. எரிமலை வெடிப்பு குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படாததால், அப்பகுதியில் வசிக்கும் சுமார் 30 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதுடன் சிலர், அயல் நாடான ருவாண்டாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்
இந்த எரிமலை வெடிப்பினால் 500-க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 15 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் உண்மையான பலி எண்ணிக்கையை கணக்கிடுவது சிரமமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தொிவித்துள்ளனா்.
மேலும் 170 குழந்தைகளைக் காணவில்லை எனவும் பல குழந்தைகள், பெற்றோரை இழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.