பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச்சடங்கு ஒன்றில் பங்கேற்றவர்கள் மற்றும் பூசகரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
காலமானவரின் மகன் யாழ்ப்பாணத்தில் வங்கி ஒன்றில் பணியாற்றுகின்றார். அவருக்கு நேற்றுமுன்தினம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தன. அதன் பெறுபேறுகள் நேற்று மாலை கிடைக்கப்பெற்ற போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந் நிலையில் வங்கியாளரின் தந்தை காலமாகிய நிலையில் இறுதிச் சடங்கு நேற்று இடம்பெற்றுள்ளது.
அதனால் வங்கியாளரின் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள், கிரியை செய்த பூசகர் உள்ளிட்டோரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் முன்னெடுத்துள்ளனர்.