Home இலங்கையாழில் இரு வீடுகள் மீது பனைமரங்கள் முறிந்து விழுந்துள்ளன

யாழில் இரு வீடுகள் மீது பனைமரங்கள் முறிந்து விழுந்துள்ளன

by admin

யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை முதல் கடும் காற்று வீசி வருகின்றது. அதனால் யாழில் இரு வீடுகளின் மீது காணியில் உள்ள பனை மரம் முறிந்து வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன. 

காரைநகர் ஜே – 48 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடொன்றின் மீது நேற்று செவ்வாய்க்கிழமை பனை மரம் முறிந்து விழுந்ததில் ஏனைக்குள் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை காயமடைந்துள்ளது. 


அவ்விடத்தை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை ஹரிபாலன் எனும் குழந்தையே காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


அரை நிரந்தர வீடான குறித்த வீட்டின் மீது பனை மரம் முறித்து விழுந்ததில் வீடு பகுதிகளவில் சேதமடைந்துள்ளது. அதேவேளை சிறிது நேரத்தில் காணியில் இருந்த மற்றுமொரு பனை மரம் முறிந்து விழுந்ததில் மதில் சேதமடைந்துள்ளது. 


இதேவேளை யாழ்ப்பாணம் முருகமூர்த்தி ஆலய பின் வீதியில் உள்ள வீடொன்றின் மீது பனை மரம் முறிந்து விழுந்ததில் , வீடு பகுதிகளவில் சேதமடைந்துள்ளது . குறித்த வீட்டில் நால்வர் இருந்த போதிலும் , அவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படவில்லை. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More