193
யாழில் தடுப்பூசி ஏற்றலில் காரைநகர், ஊர்காவற்துறை , மருதங்கேணி, நல்லூர், உடுவில், ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மிக கூடுதலான மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
குறிப்பாக காரைநகர் (115.85 வீதம்) மற்றும் ஊர்காவற்துறை (108.09 வீதம்) சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவான மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
அதேவேளை சங்கானை (42.76 வீதம்) , வேலணை,(49.78 வீதம்) பருத்தித்துறை (51.18 வீதம்) ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள ஆர்வமின்றி காணப்படுகின்றனர்.
Spread the love