153
ஆபிரிக்க நாடான புர்கினா பசோவின் வட பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 132க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பல வீடுகள் மற்றும் உள்ளூர் சந்தை என்பன எரிக்கப்பட்டுள்ளன.
இந்த வன்முறைக்கு எந்தக் குழுவும் பொறுப்பெற்றுக் கொள்ளவில்லை எனும் நிலையில் சமீப காலத்தில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதல் இது என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த சம்பவம் தன்னை சீற்றமடைய செய்துள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குடேரெஸ் (Antonio Guterres) தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love