Home இலங்கைதீப்பற்றிய கப்பல் தொடர்பில் 20 பேரிடம் வாக்குமூலம்

தீப்பற்றிய கப்பல் தொடர்பில் 20 பேரிடம் வாக்குமூலம்

by admin
(இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல்)

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினா் 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

அத்துடன் அக் கப்பலின் குரல் தரவு பதிவு சாதனம் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்துள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளார்.

குறித்த சரக்குக் கப்பல் தொடர்பான நிறுவனம் இந்த குரல் தரவு பதிவு சாதனத்தினை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்கியுள்ளதாக தொிவித்துள்ள அவா் கப்பல் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இந்த குரல் பதிவு தரவுகள் அவசியமானதெனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More