2021. 06. 07
விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்,
சுகாதார அமைச்சு,
சுவசிரிபாய,
இல 385, வண. பத்தேகமவிமலவன்ச தேரோ மாவத்தை,
கொழும்பு 10,
கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் ‘தர்ட் க்ளாஸ் தரத்தில் பணிப்புரிந்த ஊடகவியலாளர்கள்’ என நிந்தித்து கருத்து தெரிவித்தமை தொடர்பாக:
மதிப்பிற்குரிய மருத்துவர் ஹேமந்த ஹேரத் அவர்களுக்கு,
கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் பெரும்பாலானோர் ‘தர்ட் க்ளாஸ் (கீழ் தரமாக) பணியாற்றிய ஊடகவியலாளர்கள்’ என நீங்கள் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு தமது ஆழ்ந்த அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.மேலும் மக்களின்,நாட்டின் நலனிற்காக கடமையாற்றி அதற்காக உயிர்நீத்த தியாயிகலான ஊடகவியலாளர்களை நீங்கள் அவமானப்படுத்தும் மற்றும் நிந்திக்கும் விதத்தில் கருத்து தெரிவித்தமையானது கவலையளிக்கும் விடயமாக காணப்படுகின்றன. வரலாறு நெடுகிலும் ஊடகவியலாளர்களுக்கு நிகழ்ந்துள்ள அநீதிகளுக்கு (கொலை,வலிந்து காணாமல் ஆக்கப்படல்,தாக்கப்படுதல்) இன்று வரை நீதி கிடைக்காமைக்கு பிரதான காரணமாக காணப்படுவது அவர்களின் செயற்பாடுகளை தடுக்க வேண்டுமென்றே சில தரப்புகளால் நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் என்பதே எமது நம்பிக்கையாகும்.
ஜூன் 3 ம் திகதி சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நிகழ்ந்த செய்தி மாநாட்டை தொடர்ந்து, அன்றைய கருப்பொருளுக்குப் பொருந்தாத விதத்தில் மீண்டும் மீண்டும் ஊடகவியலாளரொருவர் உங்களை கேள்வி எழுப்பியதை தொடந்து நீங்கள் மிக கோப உணர்ச்சியுடன் குறித்த ஊடகவியலாளரை குறிவைத்து இக்கருத்தை தெரிவித்ததாக அறியக்கிடைக்கின்றன. இருப்பினும், சுகாதார அமைச்சின் ஊடக செய்தித் தொடர்பாளர் என்ற ரீதியில் குறித்த செய்தி மாநாட்டில் கலந்துகொண்டு, அநீதிகளுக்கு பலியான ஊடகவியலாளர்கள் தொடர்பாக தெரிவித்த கருத்து ஊடக சமூகத்தின் மத்தியில் மிக்க அதிருப்தி அளிக்கும் விடயமாக காணப்படுகின்றமை குறிப்பிடத் தக்கதாகும். ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க செயல்படும் ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு உட்பட நீதி கோரும் வெவ்வேறு அமைப்புக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின்குடும்பத்தினர் குறித்த சொல் பிரயோகம் தொடர்பில் ஆழ்ந்த வேதனை அடைகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
‘தர்ட் க்ளாஸ் (மூன்றாம் தர) வேலை’ மற்றும் ‘க்ளாஸ்’ குறித்து உங்கள் வரைவிலக்கணம் தொடர்பில் தர்க்கத்திற்கு செல்ல நாம் முற்படவில்லை. எவ்வாறாயினும், நீங்கள்ஒரு பொறுப்பான அதிகாரியாகதெரிவித்த கருத்து தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியாலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடமும்,ஊடக சமூகத்தினரிடமும் மன்னிப்பு கேட்பது தாரக கடமை என ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு நம்புவதுடன் அவ்வாறு குறித்த சொல் பிரயோகம் தொடர்பில் தமது ஆழ்ந்த இரங்கலை பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படுத்துமாறும் வலியுறுத்துவதுடன், மேலும் இந்த கடிதம் ஊடகங்களுக்கும் வெளியிடப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்
குறித்த சம்பவம் தொடர்பான காணொளிப்பதிவு: இணைப்பு
ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு
தர்மசிறி லங்காபேலி, செயலாளர், ஊடக தொழிலாளர் தொழிற்சங்க சம்மேளனம் | |
சீதா ரஞ்சனி, அழைப்பாளர் , சுதந்திர ஊடக இயக்கம் | |
துமிந்த சம்பத், தலைவர், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் | |
என்.எம் அமீன், தலைவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் | |
கணபதிப்பிள்ளை சர்வானந்த, செயலாளர், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் | |
இந்துநில் உஸ்கொட ஆரச்சி செயலாளர், இலங்கை இளம் பத்திரிகையாளர்கள் சங்கம். |