மோசடி வழக்கொன்று தொடா்பாக காந்தியின் கொள்ளுப்பேத்தி ஆஷிஷ் லதா ரம்கோபின் (56)க்கு தென்னாபிரிக்க நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறை விதித்துள்ளது. எஸ்.ஆர். மகாராஜ் என்ற ஆடை தயாரிப்பு நிறுவன அதிபரிடம் 3.22 கோடி ரூபா பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் அவருக்கு இவ்வாறு ஏழரை ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதித்துள்ளது.
இந்தியாவில் இருந்து கைத்தறி பொருட்கள், துணி வகைள் கொண்ட மூன்று கொள்கலன்கள் சரக்குகளை வரவழைக்க பணம் தேவை எனக்கூறி எஸ்.ஆர். மகாராஜ் என்ற உள்ளூர் தொழிலதிபரிடம் போலியாக தயாாிக்கப்பட்ட பெற்றுச்சீட்டுக்களை தயாாித்து லதா ராம்கோபின் வழங்கியுள்ளமை தெரிய வந்துள்ளதாக நீதிமன்றில் தொிவிக்கப்பட்டுள்ளது
ரக்குகள் கைக்கு வந்ததும் அவற்றை பங்கிட்டுக் கொள்ளும் விதமாக காந்தி குடும்பத்து பின்புலத்தை கொண்ட லதா ராம்கோபினுடன் பங்காளியாக சேரும் உடன்படிக்கையை தான் செய்து கொண்டதாகவும் ஒரு கட்டத்தில் லதா ராமகோபின் அளித்த ஆவணங்கள் மோசடியானவை எனவும் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக அறிந்ததாகவும் மகாராஜ் குறிப்பிட்டுள்ளாா். .
இது தொடர்பாக லதா ராம்கோபினுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீா்ப்பே தற்போது வெளிவந்துள்ளது.
காந்தியின் குடும்பத்தில் வழியாக வந்துள்ள அவரது கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்திகள் மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களாக உள்ளனர். லதா ராம்கோபினுடைய உறவினர்களான கீர்த்தி மேனன், மறைந்த சதீஷ் துபேலியா, உமா துபேலியா மெஸ்த்ரின் ஆகியோரும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்கள்.
லதா ராம்கோபினின் தாய் இலா காந்தி, சுற்றுச்சூழல், மனித உரிமை விவகாரங்களில் குரல் கொடுத்தவர் என்பதற்காக தென்னாபிரிக்கா, இந்தியா மற்றும் உலகின் பல அரங்குகளில் கெளரவிக்கப்பட்டுள்ளாா்.