இலங்கை பிரதான செய்திகள்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற பிாித்தானியர் கைது.

,தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற பிாித்தானியர் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். தூத்துக்குடி அருகே உள்ள தாள முத்து நகர் முத்தரையர் கடற்கரை பகுதியில்  50 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டைச் சேர்ந்தவர் என   சந்தேகப்படும் நபர் ஒருவர்   சுற்றி வருவதாக கியூ பிரிவு காவல்துறையினருக்கு நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை கிடைத்த   தகவரையடுத்து அவா்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனா்.

 
 இதனையடுத்து அங்கு சுற்றிக் கொண்டு இருந்தவரை கைது செய்த கியூ பிரிவு காவல்துறையினா் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் பிாித்தானிய கடவுச்சீட்டு மற்றும் இந்திய, இலங்கைப் பணம் என்பன வைத்திருந்தமை தெரிய வந்தது.


கைது செய்யப்பட்டவா் பிாித்தானியாவினைச் சேர்ந்த ஜோனாதன் தோர்ன்(வயது- 47) என்பது தெரியவந்துள்ளது.  இவர் இந்தியா வாழ் வெளி நாட்டினருக்கான, ஓ.சி.ஐ. என்ற அட்டை வைத்து இருந்தார். இவர் கோவாவில் இருந்து விமானம் மூலம் பெங்களுருக்கு சென்று
அங்கு இருந்து வாடகைக்கு கார் மூலம் கடந்த 9 ஆம் திகதி   தூத்துக்குடிக்கு சென்றுள்ளாா்.


தூத்துக்குடியில் உள்ள பிரபல விடுதியில்   தங்கி இருந்ததாகவும், பின்னர் தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் உரிய அனுமதியின்றி இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும், இதற்காக கடற்கரையில் நின்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.


கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை மற்றும் கோவா பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் 226 கிலோ ‘கேட்டமைன்’ போதைப் பொருள் பறிமுதல் செய்த
வழக்கில் கைது செய்யப்பட்ட ஜோனாதன் தோர்ன் 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரை சிறையில் இருந்துள்ளார்.


 பின்னர் பரோலில் வெளியில் வந்த இவர் இதுவரை 60 நாடுகளுக்கு சென்று இருப்பது தெரியவந்து உள்ளது. இதைத் தொடர்ந்து கியூபிரிவு காவல்துறையினா் ஜோனாதன் தோர்ன் மீது கடவுச்சீட்டுமுறைகேடு வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளமை குறிப்பிடத்தகக்து

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.