கடந்த 25ம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் தீப்பற்றிய எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமையாளர்களிடம் 40 மில்லியன் டொலா்களை இடைக்கால இழப்பீடாக வழங்க வேண்டும் என சட்டமாஅதிபா் மூலம் மூலம் இலங்கை கோாிக்கை விடுத்துள்ளது
கப்பலில் இருந்த வேதிப்பொருட்கள் கடலில் கலந்து சூழலை மோசமாக பாதித்து வருவதனால் . அப்பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விபத்தால் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிடும் பணிகளும் நடந்து வருகிறது.
இலங்கை வரலாற்றில் மிகுந்த மோசமான சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக கப்பலின் உரிமையாளர்களிடம் மிகப்பெரும் தொகையை இழப்பீடாக இலங்கை கேட்டுள்ளது.
கப்பலில் பிடித்த தீ அணைக்கப்பட்ட போதும் கப்பல் முற்றிலும் சேதமடைந்து பாதி மூழ்கிய நிலையில் உள்ளது. அதை அப்புறப்படுத்தும் நடவடிக்கையும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது