உலகம் பிரதான செய்திகள்

இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி-பென்னட் பதவியேற்பு

இஸ்ரேலில் பெஞ்சமின் நேதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில் புதிய பிரதமராக நப்தாலி-பென்னட் நேற்றையதினம் பதவியேற்றுள்ளாா். இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31-ம் திகதியிலிருந்து பெஞ்சமின்-நேதன்யாகு பிரதமராக இருந்து வந்தார். அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்தும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் 23-ம் திகதி நடைபெற்ற தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின்-நேதன்யாகு கட்சி 30 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை.

இதற்கிடையே, அங்கு 8 எதிர்க்கட்சிகள் ஒன்றாய் இணைந்து ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டதுடன் . சுழற்சி முறையில் பிரதமர் பதவி வரும் எனவும் முதலில் யமினா கட்சியின் தலைவரான நப்தாலி-பென்னட்(49), பிரதமர் பதவி ஏற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் யமினா கட்சி தலைவர் நப்தாலி பென்னட் வெற்றி பெற்றதையடுத்து, இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி-பென்னட் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் 9 பெண்களும் உள்ளடங்கலாக 27 பேர் உள்ளனர்.

இஸ்ரேலில் நப்தாலி-பென்னட் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளதால், பெஞ்சமின் நேதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.