ஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் 32 அடி நீளமான திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்று காலை குறித்த திமிங்கலத்தை கண்ட மீனவர்கள் இது தொடா்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்ததனைத் தொடா்ந்து அங்கு சென்றுள்ள அதிகாரிகள் குறித்த திமிங்கலம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.