பாலத்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினரின் இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. இன்று புதன்கிழமை அதிகாலை முதல் காசா நகரில் குண்டுகள் வெடிக்கும் சத்தங்களைக் கேட்க முடிந்ததாக சா்வதேச ஊடகங்கள் தொிவித்துள்ளன.
நேற்று செவ்வாய்க்கிழமை காசா பகுதியில் இருந்து வெடிபொருள்களைக் கொண்ட பலூன்கள் இஸ்ரேலை நோக்கி பறக்கவிடப்பட்டதாகவும் இதனால் பல இடங்களில் தீப்பற்றியதாகவும் இஸ்ரேலிய தீயணைப்புப்படை தொிவித்துள்ளது.
கடந்த மே 21-ஆம் திகதிக்குப் பின்னா் இந்தப் பிராந்தியத்தில் நடைபெறும் பெரிய மோதலாகும் இது. காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காசா இயக்கத்தின் எச்சரிக்கையை மீறி கிழக்கு ஜெருசலேம் பகுதியில் யூத தேசியவாதிகள் பேரணி நடத்தியதைத் தொடர்ந்து இந்த மோதல் .உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது