சர்ச்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்று வந்த முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புனரமைக்கப்படும் குருந்தாவசோக விகாரைக்கான பொது மண்டபத்துக்கும் தொல்லியல் திணைக்கள அலுவலகத்துக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இராணுவத்தினரின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.
இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜென்ரல் உபாலி ராஜபக்ஸவின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன், திணைக்களத்தின் திட்டங்களின்படி, குறித்த கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக, குருந்தூர் மலை விகாரைக்கான உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை பண்டைய சிலை இல்லமும் விரைவில் தோண்டப்படவுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது. கடந்த ஒருமாத காலமாகப் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இறுக்கமான சுகாதார நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான பூஜை வழிபாடுகள் நடைபெற்றிருந்த நிலையில் மீண்டும் மண்டபங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளரம குறிப்பிடத்தக்கது
.