இலங்கை பிரதான செய்திகள்

உடுவிலில் 7 வீடுகளை உடைத்து திருடிய மூவர் கைது

உடுவிலில் மருத்துவர் உட்பட அரச உத்தியோகத்தர்களின் வீடுகளை உடைத்து திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், சந்தேக நபர்களிடமிருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் , வீட்டுத் தளபாடங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.


மூளாய் மற்றும் அளவெட்டியைச் சேர்ந்த மூவரே இன்று இவ்வாறு செய்யப்பட்டுள்ளனர் . 
அரச உத்தியோகத்தர்கள் வீட்டைப் பூட்டிவிட்டு பணிக்குச் செல்லும் வேளையில் கடந்த சில நாள்களாக பட்டப்பகலில் வீடுடைத்து திருட்டுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன .


அவ்வாறு 7 வீடுகள் உடைத்து திருட்டுப் போனமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேலதிக விசாரணைகளை காவல்துறையினா்முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.