Home இலங்கைவௌிநாடுகளுக்கு தப்பிச்சென்ற 24 பேருக்கு, சிவப்பு அறிவித்தல்!

வௌிநாடுகளுக்கு தப்பிச்சென்ற 24 பேருக்கு, சிவப்பு அறிவித்தல்!

by admin


வௌிநாடுகளுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள 24 போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்கு சர்வதேச காவற்துறை ஊடாக சிவப்பு அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

சிவப்பு அறிவித்தலுக்கு அமைய, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளார், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல், திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் 13 பேர் தொடர்பிலேயே தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், மேலும் 11 பேர் வௌிநாடுகளில் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளார் குறிப்பிட்டார்.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஏனைய சிலருடன் மொத்தமாக 24 பேர் வௌிநாடுகளில் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளார், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More