“ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (23) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்
சபாநாயகர் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடிய போது , முதலாவது கடமையாக, ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியலானது நீண்ட இழுப்பறிக்குப் பின்னர், கட்சியின் தலைவரையே நியமிப்பது என கட்சியின் செயற்குழு அண்மையில் தீர்மானித்திருந்ததன்பிகாரம், 225 ஆவது நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார். அவர், நான்கு தசாப்த காலமாக நாடாளுமன்றில் அங்கம் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது