Home இலங்கையாழில் 8 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் – இரண்டு கிராமங்கள் முடக்கம்

யாழில் 8 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் – இரண்டு கிராமங்கள் முடக்கம்

by admin

யாழ் மாவட்டத்தில்  2 ஆயிரத்து 721 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ் மாவட்ட செயலர்  கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 
மேலும் தெரிவிக்கையில் , 


யாழ் மாவட்டத்தில் இதுவரை 72 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.  4ஆயிரத்து 919 தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். அதில் 3 ஆயிரத்து 696 பேர் சிகிச்சை பெற்று நலமாகி வீடு திரும்பியுள்ளனர். 


தற்போது உடுவில் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு மாவட்டத்தில் தற்போது 2 ஆயிரத்து 721 குடும்பங்களை சேர்ந்த 8 ஆயிரத்து 71 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளர்.


மேலும் நாட்டில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு தற்போது வழங்கட்டுவரும் ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவு யாழ் மாவட்டத்தில் இதுவரை 71 ஆயிரத்து 721 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது  என தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More