16 அரசியல் கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனா். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பொது மன்னிப்பின் கீழ் பொசன் பூரணை தினமான இன்று (24.06.21) அவர்களை விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேரைத் தவிர்த்து சிறிய குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 77 பேரும் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நீண்ட காலம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 17 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே நேற்று (23.06.21) தெரிவித்திருந்தார்.
அதற்கமைவாக, விடுதலை செய்யக்கூடிய 17 சந்தேகநபர்களின் பெயர் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.