205
மட்டக்களப்பு, செங்கலடி கறுப்பு பாலத்தில் இராணுவ வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி பாலத்திற்கு கீழே நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இராணுவத்தினர் இருவா் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இராணுவத்தினரை ஏற்றிக்கொண்டு கரடியனாறு பிரதேசத்தில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி பயணித்த இராணுவ வாகனமே இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love