198
சட்டவிரோதமாக சீசெல்ஸ் கடற் பரப்பிற்குள் நுழைந்த 12 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 படகுகளின் ஊடாக இவ்வாறு குறித்த மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் மே மாதத்தின் பின்னர் இலங்கையை சேர்ந்த 5 படகுகள் அந்நாட்டு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love