ஜம்மு விமானப்படைத் தளத்தின் தொழில்நுட்ப பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு குறைந்த சக்தியுடைய வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த வெடிப்பு சம்பவத்தில் எவருக்கேனும் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஒரு வெடிப்பு சம்பவத்தால் கட்டடம் ஒன்றின் மேற்கூரைக்கு சிறிய சேதம் ஏற்பட்டதாகவும், இன்னொரு வெடிப்புச் சம்பவம் திறந்த வெளியில் இடம்பெற்றதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த வெடிப்பு சம்பவங்களால் எந்தக் கருவிக்கும் சேதம் ஏற்பமவில்லை எனத் தெரிவித்துள்ள இந்திய விமானப்படை இந்த வெடிப்பு சம்பவங்கள் தொடா்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.