எமது தந்தையையும் விடுதலை செய்யுங்கள் என, ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன், மகள் சங்கீதா ஆகியோர் அமைச்சர் நாமல் ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் இருவரும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவை, இன்று (27.06.21) சந்தித்த போது இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
வடமராட்சியின் முள்ளி பகுதியில் இடம்பெற்ற சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு சென்ற போதே நாமல் ராஜபக்ஷவை ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் சந்தித்துள்ளனர்.
இதேவேளை, அரசியல் கைதிகளின் உறவுகளும் அண்மையில் விடுதலையான அரசியல் கைதிகளும் அமைச்சர் நாமல் ராஜபக்ஸவை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.