Home சினிமாகமலுடன் முதன்முறையாக இணையும் நதியா

கமலுடன் முதன்முறையாக இணையும் நதியா

by admin

மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013-ல் வெளியாகிய திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் வெளிவந்திருந்தது. தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் திரிஷ்யம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

 
இந்நிலையில் அண்மையில் திரிஷ்யம் படத்தின் 2-ம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதனையடுத்து இந்த படத்தையும் தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் தயாாிக்கவுள்ளதாக அறிவித்து உள்ளனர்.

மேலும் தமிழிலும் ‘திரிஷ்யம் 2’ படம் பாபநாசம் 2-ம் பாகமாக உருவாக உள்ளதாகவும், இதில் நடிக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது. . அதன் முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கவுதமி, இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டார் எனவும், அவருக்கு பதிலாக நடிகை நதியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தொிவிக்கப்படுகின்றது. இந்த கூட்டணி உறுதியானால், நடிகை நதியா, கமலுடன் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More