இங்கிலாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும், குமிழி பாதுகாப்பை மீறி, செயற்பட்டுள்ளதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடா்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் உண்மையானவையா? அல்லது பொய்யானவை? என்பது தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக என இலங்கை கிரிக்கெட் சபை தொிவித்துள்ளது.
மேலும் இங்கிலாந்துக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முகாமையாளரிடமும் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது