Home இலங்கை “அமைச்சர் பதவியா, யார் சொன்னது? நான் கேட்கவில்லையே”

“அமைச்சர் பதவியா, யார் சொன்னது? நான் கேட்கவில்லையே”

by admin

தனக்கு அமைச்சர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தியை முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, மறுத்துள்ளார்.

ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், அவ்வாறான எந்தவிதமான கோரிக்கையையும் அரசாங்கத்திடம் தான் முன்வைக்கவில்லை, அது தவறானது எனவும், அமைச்சர் பதவி மட்டுமன்றி, அரசாங்கத்திடம் எந்தவொரு பதவியையும் தான் கோரவில்லை என்றும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜூலை மாத நடுப்பகுதியில் அமைச்சரவையில் மாற்றமொன்று செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே, முன்னாள் ஜனாதிபதிக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படலாமென அந்தத் தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More