இலங்கையில்; கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் மேலும் 8 நாடுகளில் இருந்து இலங்கை செல்லும் ; சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, அங்கொலா, பொட்ஸ்வானா, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா, சுவிட்சர்லாந்து, சம்பியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 14 நாட்களுள் குறித்த நாடுகளுக்குச் சென்ற பயணிகளுக்கும், அந்த நாடுகளின் வழியாக வரும் பயணிகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடையானது எதிா்வரும் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.