யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா நிலைமையை அவதானிக்கும்போது இன்று மாலை வரை யாழில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதேவேளை 87 ஆக கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 793 நபர்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாவற்காடு கிராம அலுவலர் பிரிவும், யாழ்ப்பாண பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே/69 மற்றும் ஜே,71 கிராம அலுவலர் பிரிவும் மற்றும் கரவெட்டி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரணவாய் பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
4 ஆயிரத்து150 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மிகுதியானவர்கள் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 ஆயிரத்து 297 குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபா உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
யாழ் மாவட்டத்திற்கு கிடைத்துள்ள 50 ஆயிரத்து தடுப்பூசிகளை இன்று தொடக்கம் முதல்தரம் தடுப்பூசி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது . முதல்தரம் தடுப்பூசி பெற்ற நிலையங்களுக்கே சென்று தடுப்பூசிகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும். நெடுந்தீவு தவிர்ந்த ஏனைய சகல பிரதேசங்களிலும் தடுப்பூசி போடும் பணி வெள்ளிக்கிழமை வரை இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.