298
யாழில்.எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து சைக்கிள் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சண்டிலிப்பாய் பிரதேச செயலக முன்றலில் இருந்து மானிப்பாய் பிரதேச சபை வரையில் குறித்த சைக்கிள் பேரணி இடம்பெற்றது.
குறித்த பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் , தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா , வலி.தென்மேற்கு பிரதேச சபை தலைவர் அ. ஜெபநேசன் , வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்,
Spread the love