இலங்கை பிரதான செய்திகள்

நள்ளிரவில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம் – ஒருவரின் கை துண்டிப்பு – வீடு தீக்கிரை

யாழ்ப்பாணம் கோண்டாவிலில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை சாலை (டிப்போ) அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் நான்கிற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அதேவேளை , வீடொன்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதுடன் , கார் , முச்சக்கர வண்டி என்பவருக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , 
மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேருக்கும் அதிகமானவர்களைக்  கொண்ட வன்முறைக் கும்பல் வாகனங்கள் உள்பட பெறுமதியான பொருள்கள் சேதப்படுத்தி , வீடொன்றினுள் புகுந்து சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் ஒருவரின் கை துண்டாடப்பட்டதுடன்  நான்கிற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.