217
புதுக்குடியிருப்பு காவல்நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றையதினம் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.கண்டி மாவட்டத்தை சேர்ந்த சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக இவா் அவ்வாறு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்
Spread the love