208
வன்முறைக் கும்பல் ஒன்றினால் கைவிடப்பட்ட 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்தனர். தாவடி தோட்டவெளியில் அவை இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன.
மருதனார்மடம் சந்தைக்குப் பின்புறமாக உள்ள வீடொன்றுக்குள் நேற்றுமுன்தினம் புகுந்து தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தோர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களைத் தேடிச் சென்ற போதே வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள சுன்னாகம் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்
Spread the love