2021-07-03
திரு.சந்தன விக்ரமரத்ன
பொலிஸ்மா அதிபர்,
பொலிஸ் தலைமையகம்,
கொழும்பு.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவர்கள் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்த்தனவை முகப்புத்தகத்தில் அச்சுறுத்தும் விதமாக பதிலளித்தமை தொடர்பில்.
பொலிஸ்மா அதிபர்
ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன அவர்களால் முகப்புத்தகத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட செய்தி ஒன்று தொடர்பில் பதிலளிக்கும் விதமாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று (௦1) குறித்த ஊடகவியலாளருக்கு மறைமுகமான முறையில் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பு தனது அவதானத்தில் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த சம்பவம் தொடர்பான செய்தி பதிவின் முகப்புத்தக இணைப்பு.– https://m.facebook.com/story.php?story_fbid=4804876112874609&id=100000568041748
ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன அவர்களால் போலிச் செய்தி பதிவிடுவதாகவும், குறித்த செயற்பாட்டிற்காக இயற்கை அவரை தண்டிக்கும் என்பதாகவும் மீண்டும் மீண்டும் பதிவிட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், மேலும் குறிப்பிட்டதாவது பிரபாகரன் மற்றும் மற்ற குற்றவாளிகளுக்கு ஏற்பட்ட நிலை தொடர்பில் வரலாறை பார்வையிடுமாறு பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். குறித்த ஊடகவியலாளர் இங்கு தான் எழுதிய போலிச் செய்தி என்னவென்று வினவியபோது அது தொடர்பில் திட்டவட்டமான பதில் எதுவும் தேசபந்து தென்னகோன் அவர்களால் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஒரு சந்தர்பத்தில் மாத்திரம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக எழுதப்பட்ட செய்தி குறித்து குறிபிட்டார்.
தரிந்து ஜயவர்தன தலைமை ஆசிரியராக கடமையாற்றும் www.medialk.com செய்தி வலைத்தளத்தில் குறித்த செய்தி பதிவிடப்பட்டுள்ள இணைப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது https://medialk.com/archives/5653
2021 ஜூன் 29 திகதி அன்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தரிந்து ஜயவர்தன எழுப்பிய கேள்விக்கு வெகுசன ஊடக அமைச்சர் மற்றும் அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல அளித்த பதிலை தான் இந்த செய்தி கட்டுரையை எழுத மூலதாரமாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சமீபத்திய நிகழ்வுகளைப் அவதானிக்கும்போது , “பொய்யை தான் சொல்வது நிச்சயமாக இயற்கை வெற்றிக்கொள்ளும் – பிரபாகரன் மற்றும் பிற குற்றவாளிகளைப் பாருங்கள்”என்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கூற்று உட்பட அவரின் பதில் அளிக்கும் விதம் தொடர்பிலும் பாரிய எச்சரிக்கை இருப்பதாக ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பாகிய நாம் நம்புகிறோம்.
மேலும், போலி செய்திகளை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு நியாயமற்ற முறையில் கைது செய்யப்பட்டு இன்றுவரை தடுப்புக்காவலில் இருக்கும் பெரும்பாலானோருக்கு எதிராக இதுவரை முறையாக வழக்கு கூட தொடராத நிலையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவர்களால் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவிற்கு அளித்த பதில் தொடர்பில் கருத்தில் கொள்ளுமாறும், அது தொடர்பில் முறையான விசாரணை மேற்கொண்டு குறித்த ஊடகவியலாளரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டிக்கொள்கின்றோம்
நன்றி
இப்படிக்கு
உண்மையுள்ள
பிரதி-
1) தலைவர்- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு