மாகாணங்களை விட்டு வெளியேற பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையிலான சொகுசு பேருந்து சேவைகள் இடம்பெறுகின்றன.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் – கொழும்பு சொகுசு பஸ் சேவைகளில் சில தனியார் ஈடுபட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் மாகாணங்களுக்கு இடையிலையே பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெற்று வரும் நிலையிலயே கட்டுப்பாடுகளை மீறி யாழில் இருந்து கொழும்புக்கு சொகுசு பஸ் சேவைகள் இடம்பெறுகின்றன.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபட்ட சொகுசு பேருந்தினை சுகாதார பிரிவினர் மடக்கி அதில் பயணித்தோருக்கு பி.சி. ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட போது மூவருக்கு கொரோனோ தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.