206
யாழில் கொடுத்த கடன் காசை திருப்பி கேட்க சென்றவர் மீது தந்தையும் மகனும் சேர்ந்து கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் மோகனராஜா ரஜீவன் (வயது 37) என்பவரே மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை நடைபெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த நபர் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலாளிகளான தந்தையையும் , மகனையும் கோப்பாய் காவல்துறையினா் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Spread the love