பொதுமக்கள் பெருமளவில் கூடும், பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஆகக் கூடுதலாக பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றின் ஊடாக கொரோனா வைரஸ் மிகவிரைவாக பரவுதற்கு கூடுதலான சந்தர்ப்பம் உள்ளதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை இலங்கையில் நேற்றையதினம் (05) மேலும் 45 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அந்தவகையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,313 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.