பிரதமர் மகிந்த ராஜபக்ஸ பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டத்தை செயற்படுத்தும் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இதுவரை காலமும் நிதி அமைச்சராக அவா் கடமையாற்றியிருந்தார். இந்த நிலையில் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டத்தை செயற்படுத்தும் அமைச்சு தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.