அதிக கிராண்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்த சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் பெடரர், விம்பிள்டன் போட்டியின் காலிறுதிப் போட்டியில் நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளாா்.
20 கிராண்ஸ்லாம் பட்டம் பெற்ற அவரை போலந்து நாட்டின் ஹியூபெர்ட் ஹர்கேக்ஸ் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளாா். இதுவரை ரோஜர் பெடரர் பங்கேற்ற விம்பிள்டன் போட்டிகளில் ஒன்றில் கூட புள்ளிகள் ஏதும் பெறாமல் செட்டை இழந்ததில்லை.
ரோஜர் பெடரர் தோல்வியடைந்தாலும் விம்பிள்டன் மைய அரங்கில் கூடியிருந்தவர்கள் அவருக்கு எழுந்து நின்று கரவொலி எழுப்பினார்கள்.
போட்டிக்குப் பிறகு பேசிய பெடரர் தனது ஓய்வு குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளாா். 39 வயதான பெடருக்கு அண்மையில் மூட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது