கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நாடாளுமன்றத்துக்கு செல்லும் வழியில், பொல்துவ சுற்றுவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்ட போது, கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 33 பேரும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவா்களுக்கு பிணையும் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறினர் என்ற குற்றச்சாட்டின் கீழ், அவர்களில் சிலரை, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு காவல்துறையினா் அழைத்துச் செல்வதற்கு முயன்றதனையடுத்தே அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது