188
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிக்காத நிலையில் பாரிய வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் குறித்த பகுதியில் பகுதியில் தனியார் ஒருவா் காணியினை துப்புரவு செய்யும் போது வெடிபொருட்கள் போன்றவை இனங்காணப்பட்டுள்ளதை தொடர்ந்து அது தொடர்பில் அருகில் உள்ள படையினருக்கு தெரியப்படுத்தியுள்ளாா்.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கமைய கிளிநொச்சியில் இருந்து வெடிபொருள் அகற்றும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு குறித்த பகுதி தோண்டப்பட்ட போது, விடுதலைப் புலிகள் பயன்படுத்திய சுமார் 250 கிலோவிற்கும் அதிக நிறைகொண்ட வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
Spread the love